ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஜொனதன் ட்ரொட் 2025 ஆண்டு இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபை 12 மாத ஒப்பந்தத்தை நீடித்துள்ளது. 2024ம் ஆண்டு அணியின் சிறந்த பெறுபேறுகளையடுத்து அவருக்கான சந்தர்ப்பம் நீடிக்கப்பட்டுள்ளது.
ட்ரொட்டின் பயிற்றுவிப்பாளர் காலத்தில் ஆப்கானிஸ்தான் 2022 ஜீலை முதல் இதுவரையான 18 மாத காலப்பகுதியில் 34 ஒருநாள் போட்டிகளில் 14 வெற்றிகளையும், 44 டீ-20 போட்டிகளில் 20 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
அத்துடன் ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக டீ-20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.









