ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேகாலை – அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியில், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.









