யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் கீழ், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வு நேற்று (24) பி. ப 04.00 மணியளவில் பலாலி வடக்கில், வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் (வைத்திய கலாநிதி) H. M. சுசில் ரணசிங்ஹ அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் மூன்று வீடுகளைத் திறந்து வைத்து, அவற்றின் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். அந்த வகையில், அமைச்சினால் தலா ரூ. 20 இலட்சம் பெறுமதியில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வாண்டு மொத்தம் 93 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது









