கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி 12 தொன் புண்ணாக்கு ஏற்றிச் சென்ற லொறியொன்று, கினிகத்தேனை – கடவல பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (25) அதிகாலை 5 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஆபத்தான வளைவொன்றில் பயணித்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதி வாகனம் செலுத்தும்போது உறங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









