மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற பட்டாசு விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், ஆலயத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தபோது அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
திருவிழாவில் வெடிக்க வைக்கப்பட்ட பட்டாசு ஒன்று முறையாக வெடிக்காத நிலையில், அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பட்டாசு திடீரென வெடித்தபோது, அதனை பார்வையிடுவதற்காக சிறுவன் அருகில் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









