தமிழகத்தின் முக்கிய 52 ஆலயங்களில் ஸ்மார்ட் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு , தமிழக அரசு தடை விதித்துள்ளது.
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தடை அமுலுக்கு வந்துள்ளது.
ஆலயத்திற்கு வருகைதருவோர், சாமி சிலைகளைப் படம் பிடிப்பது, ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தடுத்து ஆலயங்களின் அமைதியையும் புனிதத்தன்மையையும் காப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் கெமரா வசதி இல்லாத சாதாரண சாதாரண மொபைல் போன்களை ஆலயங்களுக்குள் எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆலயங்களுக்கு வருகைதருவோர் தமது ஸ்மார்ட் போன்களைக் ஆலய வாசலில் உள்ள பிரத்யேகக் கவுண்டர்களில் கட்டணம் செலுத்திப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









