செல்பி எடுக்க முயன்ற வெளிநாட்டு யுவதி ரயிலில் இருந்து விழுந்து படுகாயம்!
நாணுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அம்பேவெல பகுதியில் வைத்து வெளிநாட்டு யுவதி ஒருவர், செல்ஃபி (Selfie) புகைப்படம் எடுக்க முயன்றபோது ரயிலில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக நுவரெலியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.









