கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதன் , கௌரவ உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன் , கௌரவ உறுப்பினர் கணபதி கண்ணதாசன், கௌரவ உறுப்பினர் பொன்னையா இரவிச்சந்திரன் , கௌரவ உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன், கௌரவ உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர் , கௌரவ உறுப்பினர் இராமதாஸ் சாந்தினி , கௌரவ உறுப்பினர் ரசிக்கா ஜீவனி கலந்துகொண்டதுடன்,
ஹட்டன் சீடா கல்வி வள நிலையத்தின் இணைப்பாளர் திரு. பரமஜோதி , கொட்டகலை வேல்ட் விஷன் நிறுவனத்தின் அபிவிருத்தி அதிகாரி திரு ஜோஷ்வா , கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் திரு விஜேசுந்தரம் , கொட்டகலை பொது நூலகத்தின் நூலக பொறுப்பதிகாரி திருமதி சமரக்கோன் உட்பட கொட்டகலை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின்போது கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று மலையக சமூகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதற்காக அர்ப்பணிப்புடன் பங்காற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்களும் கௌரவிக்கப்பட்டனர்.









