நாடளாவிய ரீதியில் 2வது நாளாக விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பதிவாகிவரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அனைத்து பொது இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயாளர்களின் ண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு. பொது நிர்வாகம். உட்துறை. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்புகள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. நாடளாவிய ரீதியில் இதுவரை 84 டெங்கு அதி அபாய வலயங்கள் அiடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் மிக அதிவேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது:
கொழும்பு, கம்பஹா, களுத்துறை,காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம் ,இரத்தினபுரி, கேகாலை ,கண்டி, மாத்தளை , மட்டக்களப்பு,பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றது.
பாடசாலை மாணவர்கள் இ டெங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகக் காணப்படுவதால் பாடசாலை வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பெற்றோர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.







