ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் கொட்டகலைக்கும் பத்தனைக்கும் இடையிலான பகுதியில் ஒரு வழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மேலே உள்ள மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தின் மலை உச்சியில் உள்ள பல மரங்களின் வேர்கள் வெளியே தெரிவதால் குறித்த மரங்கள் எந்நேரத்திலும் சரியக்கூடும். அத்துடன் தற்போது நிலவும் பலத்த காற்றுடனான வானிலை நிலைமையை மேலும் மோசமாக்கலாமென எதிர்கூறப்பட்டுள்ளது. அபாயகரமான மரங்களை அகற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.









