நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன்இ மாத்தறைஇ கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மழையுடனான வானிலைக் காரணமாக 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹாஇ களுத்துறைஇ இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலக பிரிவுக்கும்இ இரத்தினபுரி மாவட்டத்தின் .ரத்தினபுரிஇ குருவிட்ட ஆகிய பிரதேச செலயக பிரிவுகளுக்கும் 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்திள் புலத்சிங்கள் பிரதேச செயலக பிரிவுக்கும்இ இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலக பிரிவுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவேஇ அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.









