ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ‘கம்பன் புகழ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இன வேற்றுமையால் பிளவுபட்டிருந்த தேசத்தை ஐக்கியப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பணிகளை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கம்பன் கழக பெருந்தலைவர் ஜெ.விஸ்வநாதனுடன் , தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை, மலேசியாவின் முன்னாள் அமைச்சர் எம்.சரவணன் ஆகியோர் ஜனாதிபதியை கௌரவித்தனர்.
அகில இலங்கை கம்பன் கழகம் ஒழுங்குசெய்திருந்த நிகழ்வு , வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை பாராட்டினார்.
இதேவேளை சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









