மியன்மாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு அரசாங்கம் 4 ஆயிரத்து 335 சிறைக்கைதிகளை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.
மியன்மார் முன்னாள் ஜனாதிபதி வின் மைண்ட்டும் பொதுமன்னிப்பின்கீழ் விடுவிடுக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மரணதண்டனை கைதிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஆயுட்தண்ட கைதிகளுக்கு 40 வருட சிறைதண்டனை என தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் 179 வெளிநாட்டவர்கள் காணப்படும் நிலையில், அவர்கள் உடனடியாக சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் மியன்மார் தகவல்கள் தெரிவிக்கின்றன.









