லெபனானுக்கும் இஸ்ரேலுக்கு இடையில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தைகள் வொஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் , லெபனானை இலக்காக கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில் இருதரப்பிற்குமிடையில் யுத்த நிறுத்ததை ஏற்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாக மத்தியஸ்தம் வகிக்கும் அமெரிக்கா அறிவித்துள்ளது.









