மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அண்மையில் பரவியிருந்த XFG கொவிட் தொற்று பரவல் தற்போது மலேசியாவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்புளுவன்சா தொற்றால் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மலேசியாவில் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








