இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்துவதற்கு , இந்திய பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் கொள்வனவு செய்யும் நிலையில், அமெரிக்கா இந்திய இறக்குமதிகளுக்கு கூடுதல் வரிவிதிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் கொள்வனவு செய்யும் நாடுகளாகவுள்ளன.
தற்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்திக்கொள்வதாக உறுதியளித்துள்ள நிலையில், சீனாவையும் இதற்கு இணக்கம் தெரிவிக்க வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யா யுக்ரேன் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். யுக்ரேன் மக்களை கொல்வதையும் நிறுத்தவேண்டும்.
அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எரிபொருள் கொள்வனவு செயற்பாடானது , மறைமுகமாக யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அதிகரித்து வருகிறது. எனினும் இதனால் தமது பொருளாதார , வர்த்தக நடவடிக்கைகளில் ரஷ்யா பின்தங்கிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








