இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டிலிருந்து பயணமாகியுள்ளார்.
இன்று (16) அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்குறிய UL 191 ரக விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு பயணித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 18ம் திகதிவரை பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சிலருடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்தியாவின் NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்துள்ள, NDTV உலக மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.








