தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் பியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும்,
பெக்கோ சமனின் சகல நிதி செயற்பாடுகளையும் குறித்த நபர் நிர்வகித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரிடம் விற்பனைக்காக காணப்பட்ட 555 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைத்துப்பாக்கி மற்றும் ரவைபெட்டி என்பனவும் கைப்பற்றபட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் அறிவுறுத்தல்களுக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.








