பதுளை , ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2005 Sky Kings அணியினரின் தலைமையில் மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.
கடந்த 5ம் மற்றும் 6ம் திகதிகளில் பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.
27 அணிகள் தொடரில் பங்கேற்ற நிலையில் செம்பியனாக 2015 Black Panthers அணியும் , இரண்டாம் இடத்தை 2017 Singa Sports அணியும் பெற்றுக்கொண்டனர்.
தொடரில் மூன்றாம் இடத்தை 2009 fire boys அணியினர் தமதாக்கினர்.
பதுளை , ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்கள் , முன்னாள் ஆசிரியர்கள் தற்போதை அதிபர், மற்றும் ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றதோடு பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.









