சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய எண்ணெய் தாங்கியில் நேற்று பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.எண்ணெய் அகற்றப்பட்டிருந்த தாங்கியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திடீரென தீ பரவியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.









