எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோமீட்டர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 200 மீட்டர் பள்ளத்தில் பஸ் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்ற ,தங்காலை நகரசபை ஊழியர்கள் குழு குறித்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது. 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









