வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்றைய தினமும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அத்துடன் வடக்கு தென்னை முக்கோண வலயத்தினையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
மேலும் மாவட்ட அபிவிருத்த்p பணிகள் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.









