நாட்டின் பல இடங்களிலுமுள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்த முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
நுவரெலியா, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் கதிர்காமம் போன்ற பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் இவ்வாறு சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படவுள்ளன.
தனியார் துறையைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் 2026 சுற்றுலாத்துறை தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
ஜனாதிபதி பணியகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மேலும் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு வசதியான விடுமுறை விடுதிகளாக மேம்படுத்துவதில் முதலீடு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவில் முறையான திட்டம் செயல்படுத்தப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









