குளியாப்பிட்டிய, தும்மலசூரியவில் இடம்பெற்ற கவலைக்கிடமான வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இரண்டு பேரும், வேனின் சாரதியும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வேன் ஒன்றும் லொரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









