கடந்த 10ம் திகதி இடம்பெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவுசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 43 பாடசாலைகளில் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் இடம்பெறுகின்றன.
சுமார் 6000 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகள் நிறைவுசெய்யப்பட்டதும், ஒவ்வொரு மாணவரும் பெற்றுக்கொண்ட புள்ளிகள் தொடர்பான தரவுகள் எதிர்வரும் 28ம் திகதி கணிணியில் பதிவேற்றப்படவுள்ளது.
அதனையடுத்து எதிர்வரும் 30ம் திகதி முதல் பெறுபேறுகளை பரிசீலிக்கும் செயற்பாடு 8 தினங்களுக்கு இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் பின்னர், இறுதிக்கட்ட பெறுபேறு பரிசீலனை முன்னெடுக்கப்பட்டு, துரிதமாக பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.









