யாழ் கொட்டடி பகுதியில் வீடொன்றில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ .ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









