பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் துப்பாக்கிதாரிகள் பயணிகளுடன் பஸ் வண்டி ஒன்றை கடத்திச்சென்ற நிலையில் பஸ் பயணிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை மாலை பஸ் வண்டிகளில் பயணித்த பயணிகள் துப்பாக்கிதாரிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக பலுசிஸ்தான் மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அறிவித்திருந்தார்.
பலுசிஸ்தானில் இருந்து பஞ்சாபின் மத்தியப் பகுதிக்குச் சென்ற பஸ் வண்டி பஞ்சாபி இனத்தைச் சேர்ந்த பயணிகள் குறிவைக்கப்பட்டிருக்கலாமென அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டனர்.
இந்நிலையில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட சடலங்கள் மலைப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவிதத்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் உட்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் சம்பவம் தொடர்பில் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.









