ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
அவர் இந்தியாவில் பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவுள்ளதோடு, முக்கிய தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.
ஜனாதிபதியின் பயணத்தையடுத்து 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன
பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர
நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர
பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.








