சிவப்பு சீனிக்கான வெட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு வெட் வரி அறவிடப்படுவதில்லை. எனினும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சர்க்கரைக்கு வெட் வரி அறவிடப்படுகிறது.
அத்துடன் சந்ரதையில் கிலோ சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
அதற்கமைய சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாகவும்இ இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி அத்தியாவசியப் பொருளாகவும் மாறியுள்ளது.
இதனை விரைவில் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.









