இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்துள்ளது.
இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து அதனூடக படைத்துள்ளது. அத்தோடு இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வெள்ளையடிப்பு செய்த முதல் அணி என்ற பெருமையையும் நியூசிலாந்து பெற்றது.
மூன்றாது போட்டியில் நியூஸிலாந்து வீரர் அஜாஸ் படேல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 11 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்ததோடு போட்டியின் ஆட்டநாயகனாக தெரிசெய்யப்பட்டார். தொடர் நாயகனாக வில் யங் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.









