வானிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான சாத்தியம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் செயற்படும் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக குறித்த கடல் பகுதிகளில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.; கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.
குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









