Lanka Water Expo – 2024 கண்காட்சி கூடம் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அமைச்சர் ஜீவன் தொண்;டமான் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
Indian Water Today(pvt) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு (19,20,21) தொடர்ச்சியாக கண்காட்சி இடம்பெறும்.
40 க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் இந்திய நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கெடுத்துள்ளன.
‘நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு செயலூக்கமான வலையமைப்பினை தடங்கள் இன்றி வழங்குதல் மற்றும் உலகளாவிய நீர் நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதில் ஒன்றிணைந்து பணியாற்றுதல்’ என்பதே கண்காட்சியின் நோக்கமாகும்.









