22 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் 6 வருடங்களுக்கு மேல் என்ற சொற்தொடருக்கு பதிலாக ‘5 ஆண்டுகளுக்கு மேல்’ என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.22 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









