விளையாட்டு துறை அமைச்சினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கிடையிலான பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியில் வவுனதீவு பிரதேச செயலகம் சார்பாக பன்சேனை வீராங்கனைகளும் வாகரைப்பிரதேச செயலகம் சார்பாக கட்டுமுறிவு வீராங்கனைகளும் இணைந்த மட்டு மாவட்ட அணியாக விளையாடினர்.
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அணிகளுக்கிடையிலான போட்டியில் 6:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிழக்கு மாகாண செம்பியனாக மட்டக்களப்பு மகளிர் அணி தெரிவாகியுள்ளது









