இவ்வாண்டுக்கான இரண்டாவது உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ம் திகதி அறிவிக்கப்படுமென பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் மஞ்சுள பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. ஜூலை மாதம் 8ம் திகதி வரை பொதுமக்களின் எழுத்துபூர்வ கருத்து மற்றும் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வாய்மூல கருத்துக்கள் எதிர்வரும் ஜூலை 9ம்; திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுமக்களின் ஆலோசனைகளுக்கமைய உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடியு எடுக்கப்பட்டு, ஜூலை மாதம் 15 ம் திகதி அறிவிக்கப்படுமென பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் மஞ்சுள பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.








