வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்று அவரது உடல்நலம் தொடர்பில் விசாரித்துள்ளார்.
வடமாகாணத்திற்கு விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி யாழ்;;ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உறுமய காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு , இளைஞர் மாநாடு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் விக்னேஸ்வரன்உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்துகொண்ட ஜனாதிபதி , யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்று அவரது நலம் விசாரித்ததோடு அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.









