முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு கிராம மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் பெருமளவிலான காணிகளை விடுவிக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய எஞ்சியுள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உறுமய வேலைத்திட்டத்தின்கீழ் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தபோமே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.









