அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அடுத்த வருடமே கவனத்திற்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்ட பல சலுகைகள் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் அழித்தது. அனைத்து மக்களும் கடந்த இரு வருடங்களாக கடினமாக வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றனர். 2024ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அடுத்தவருடம் அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.









