பெல்மடுல்ல, லெல்லுபிட்டிய தோட்டத்தின் பெரண்டுவ பகுதியில், 30 அறைகள் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 6 லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரில் சந்தித்து அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.








