சட்டவிரோதமாக இலங்கை கடற்படை எல்லைக்குள் நுழைந்து நெடுந்தீவு அருகே மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுத்த 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மீனவர்களின் மூன்று விசைப்படகளும் படையினளரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பின்னர் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயணித்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளினூடாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.








