இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டம், அடோனி – திருமலா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மண்டபத்தில் திடீரென தீப்பற்றியதுடன், அலங்காரப் பொருட்களிலும் தீ வேகமாக பரவியுள்ளது.
மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் மண்டபம் மற்றும் அலங்காரப் பொருட்கள் பெருமளவில் சேதமடைந்ததுடன், விநாயகர் சிலையும் தீயில் கருகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.









