யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில்இ அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன் மூலம் முறையிட முடியும்.
இதற்காக 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை அழைப்பை மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் அரச சேவை தொடர்பான காலதாமதங்கள் மற்றும் தடைகள் குறித்து அரசாங்க அதிபருக்கு நேரடியாகத் தெரிவிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









