பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று முற்பகல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.









