தம்புள்ளை இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘தியஜனனி’ மிதக்கும் சூரிய மின் சக்தி திட்டம் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மிதக்கும் சூரிய மின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்ப்பரப்பில் சூரிய மின் தகடுகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 5 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் ‘தியஜனனி’ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.









