மறைந்த தமிழறிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் இலக்கியம் மற்றும் பட்டிமன்றத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேராசிரியராக தனது பயணத்தைத் தொடங்கி, பட்டிமன்றங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் தனி இடம் பெற்ற சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.









