நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் திருவிழாவான இன்று, மிகவும் விமரிசையாக ‘சூர்யோற்சவம்’ இடம்பெற்றது.
இன்று காலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, ஏழு குதிரைகள் பூட்டிய பவள ரதத்தில் சூரிய பகவான் எழுந்தருளி, உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானையும் சூரிய பகவானையும் தரிசித்து அரோகரா கோஷத்துடன் தமது வழிபாடுகளைத் தெரிவித்தனர்.









