பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று உத்தரவிட்டார்.
இன்று முற்பகல் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான அவரிடம், 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட் ட நிலையில், ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த காரணங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
✈️ வழக்கின் பின்னணி: பேச்சுப்பொருளாக மாறிய எயார்பஸ் விமானக் கொள்வனவுச் சம்பவத்தில் 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









