கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது அதுதொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இஷாரா செவ்வந்தி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதன்போது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.









