கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜெனரல் அனில் பீரிஸ் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடினார்.
மாகாணத்தின் பாதுகாப்பு நிலை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குகளை பராமரிப்பதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.









