மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் , முழுமையான பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நாளை நடைபெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர், மாலபே தலஹேன பராக்கிரம மாவத்தையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, கடந்த 17 ம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
பொலிஸ் ஒழுக்கக் கோவைகளின்படி தற்கொலை செய்துகொள்ளும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் பொலிஸ் மரியாதை வழங்கப்படமாட்டாது என சில தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் குறித்த மரணம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.









